44 வயதிலும் 28 வயது கீர்த்தி சுரேஷை ஓரங்கட்டும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்ட மீனா.! சபாஷ் சரியான போட்டி எனக்கூறும் ரசிகர்கள்.!

0

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவிலையே ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை மீனா இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர்.

இவருக்கு கண்ணழகி என்ற பட்டமும் உண்டு.  பல முன்னணி நடிகர்கள் மீனாவுடன் எப்படியாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு குறிக்கோளுடன் இருப்பார்கள்.  ஏனென்றால் அந்த அளவு மிகவும் அழகாக இருப்பார் இவர் அழகில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர்களும் விழுந்துள்ளார்கள்.

மீனா பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் மீண்டும் தமிழில் கடைசியாக தம்பிக்கோட்டை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  மேலும் தெலுங்கு மலையாளம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வந்தவர் இதனால் 2021 ஆம் ஆண்டு இவருக்கு இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்திலும் திரிஷ்யம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.  இதில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் தள்ளிக்கொண்டே போகிறது.

இந்த நிலையில் நடிகை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி, நடிகர் கிச்சா சுதீப் மலையாள நடிகை மஞ்சுவாரியர் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர்களுக்கு ஒரு சவால் ஒன்றை கொடுத்துள்ளார்.  அதாவது அண்ணாத்த திரைப்படத்தில் மீனா கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளதால் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார் இந்தியா கிரீன் இந்தியா பேலன்ஸ் அதாவது அனைவரும் அவரது வீட்டில் மரக்கன்று நடுவது தான் அவரது சேலஞ்ச்.

இதோ அந்த புகைப்படம்.

meena
meena