சித்தி 2 சீரியலில் புதிதாக அறிமுகமான பிரபல நடிகை.! இதற்கு மேல் பட்டையை கிளப்பும்

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.அந்த வகையில் கிட்டத்தட்ட 25 வருடங்களாக ஏராளமான சீரியல்களை இயக்கி சீரியலுக்கு என்று பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி.

சன் டிவியில் ஆரம்ப காலகட்டத்தில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் குடும்ப இல்லத்தரசிகள் மற்றும் முதியவர்களுக்கு பிடித்த வகையில் அமைந்தது. அதன் பிறகு வெள்ளித்திரையில் பிரபலமடைய முடியாமல் சின்னத் திரைக்கு அறிமுகமான நடிகர்,நடிகைகளை வைத்து சீரியல்களை ஒளிபரப்பி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக அந்த சீரியல்கள் பிரபலமடையவில்லை.

டிஆர்பி பெரிதும் அடிவாங்கியது இதனை பயன்படுத்திக் கொண்ட மற்ற தொலைக்காட்சிகள் சன் டிவியை ஓவர் டேக் செய்து ரசிகர்கள் விரும்பும் வகையில் அதிகப்படியான காதல் காட்சிகள் இடம்பெறுவது மற்றும் புதுமுக நடிகர்,நடிகைகளை அறிமுகப்படுத்துவது போன்றவற்றை செய்து வந்தார்கள்.

அதன் பிறகு சன் டிவியும் மற்ற தொலைக்காட்சிகளை போலவே சமீப காலங்களாக ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களை புதிதாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல்தான் சித்தி 2.

இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வந்ததால் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. அதன்பிறகு மற்ற மாநிலங்களில் படப்பிடிப்புகளை நடத்தி சீரியல்களை ஒளிபரப்பி வந்தார்கள்.

ஆனால் தற்போது மீண்டும் தமிழ் நாட்டில் படப்பிடிப்புகள் நடத்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சித்தி 2 சீரியல் புதிதாக காயத்ரி இணைந்துள்ளார். அவர் சித்தி 2 சீரியல் எந்த லுக்கில் என்ற புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

KAYATHRI 2

Leave a Comment

Exit mobile version