TRP – யில் உச்சத்தை தொடுவதால் கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தும் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி.?

சின்னத்திரையின் நம்பர் ஒன்று சேனலாக வலம்வரும் சன் டிவியில் பொழுதுபோக்கிற்காக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் தற்போது தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே டிஆர்பி யில் முன்னிலையில் வலம் வந்து கொண்டிருக்கும் கயல் சீரியல் மக்கள் பலரின் ஃபேவரட் தொடர் ஆகும்.

இதில் ஹீரோயினாக கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி அவரது குடும்பத்திற்காக தைரியமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்றவற்றை மையமாக வைத்து எடுத்து வருகின்றன. நடிகை சைத்ரா ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

பின்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இந்த சீரியல் மூலம் பல ரசிகர்களை தக்க வைத்துக் கொண்ட சைத்ரா ரெட்டி  தற்போது கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த சீரியலில் கதாநாயகனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த ராஜாராணி சீசன் 1 தொடரில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ் தற்போது கயல் சீரியலில் நடித்து வருகிறார். மற்ற சீரியல்கள் போல கயல் சீரியலிலும் கதாநாயகிக்கே பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து அவரது கதாபாத்திரம் சிறப்பாக காண்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதில் சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம். மேலும் இந்த சீரியலில் நடித்துவரும் மற்ற பிரபலங்களை காட்டிலும் இவருக்கு தான் அதிக சம்பளம் எனவும் கூறப்படுகின்றன.

Leave a Comment