கண்டாங்கி புடவை கட்டி அச்சு அசல் கிராமத்து பெண் போல் ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர் காவியா அறிவுமணி.!

kavya-arivumani
kavya-arivumani

இந்தியத் தொலைக்காட்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை காவியா அறிவுமணி மணி. இவர் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்று வருகிறார். இதற்கு முன் முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா  நடித்திருந்தார். அந்த கதை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அவருக்கு பிறகு அந்த கதாபாத்திரத்தை யார் பூர்த்தி செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவியா தற்பொழுது அந்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்துள்ளார். தற்பொழுது காவியா கொஞ்சம் கொஞ்சமாக முல்லையாகவே மாறிவிட்டார்.

kaviya arivumani
kaviya arivumani

ரசிகர்கள் சித்ராவை தவிர முல்லையாக வேறு யாரையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கூறி வந்தார்கள். அதனால் பலமுறை காவியாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு காவியா புதிய புதிய கேரக்டரில் நடித்து ரிஸ்க் எடுக்க எனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறினார் அப்படித்தான் முல்லை கதாபாத்திரத்தையும் சவாலாக நினைத்து ஏற்றுக் கொண்டேன் என கூறினார்.

மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க வில்லை என்றால் வேறொரு சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது என கூறியுள்ளார். இந்த நிலையில் காவியா அடிக்கடி சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்வார்.

kaviya arivumani
kaviya arivumani

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறும் விதமாக கண்டாங்கி புடவை கட்டி புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் உருகி உருகி வர்ணித்து வருகிறார்கள்.

kaviya arivumani
kaviya arivumani