பிரியா பவானி சங்கரை அப்படியே உரித்து வைத்திருக்கும் கீர்த்தி பாண்டியனின் அக்கா – புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

Kavitha Pandian : ஒருவரைப் போல் இன்னொருவர் இருப்பது வழக்கம் அந்த வகையில் பிரியா பவானி ஷங்கர் போலவே ஒரு பிரபலம் இருக்கிறார் அதன் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் அருண் பாண்டியன்.

முதிலில் நடிகராக பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் வயது முதிர்வின் காரணமாக சினிமாவில் சில காலங்கள் நடிக்கவில்லை நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்பொழுது தான் வாய்ப்புகள் ஒன்று இரண்டு எட்டிப் பார்க்கின்றன. இருந்தாலும் தயாரிப்பாளராக மாஸ் காட்டி வருக்கிறார்.

இவருக்கு மொத்தம் மூன்று மகள்கள் கவிதா பாண்டியன் , கிரானா பாண்டியன்மற்றும் கீர்த்தி பாண்டியன். இளைய மகள் கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன் காதலித்து வந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு தான் திருநெல்வேலியில் இருக்கும் அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.

அதனைத் தொடர்ந்து சென்னையில் ரிசப்ஷன் நடந்தது அதில்  சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அசத்தினர். தொடர்ந்து கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வனின் புகைப்படங்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வந்த நிலையில் கீர்த்தி பாண்டியனின் அக்கா கவிதா பாண்டியனின் புகைப்படமும் இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இவர் பார்ப்பதற்கு அப்படியே பிரியா பவானி ஷங்கர் போலவே இருக்கிறார் கவிதா பாண்டியனுக்கு தற்பொழுது 40 வயதாகிறது. இவர் 2008 ஆம் ஆண்டு கிருஷ்ணா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் AP குரூப் மூலம் பல படங்களை சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் விநியோகம் செய்து வருகிறார். இதோ கவிதா பாண்டியன் பார்ப்பதற்காக அச்சு அசல் பிரியா பவானி ஷங்கர் போலவே இருக்கும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Kavitha pandian
Kavitha pandian
Kavitha pandian
Kavitha pandian