அச்சு அசல் மாஸ்டர் JD போல் கட்டம் போட்ட சட்டை, கையில் காப்பு, காதில் ஹெட் செட் மாட்டி கலக்கும் கவின்.! பேன் மேட் புகைப்படம் இதோ.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த படம் மாஸ்டர்.

இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து மாளவிகா, ஆண்ட்ரியா, சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அருண்தாஸ் போன்ற பலரும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து படத்தின் வெற்றிக்கு உதவினாலும் அவர்களை விட பல மடங்கு உழைத்து விஜய்க்கு இணையாக பயணித்தார் வில்லன் விஜய் சேதுபதி.

இவர்கள் இருவரும் சந்திக்கும் காம்போ மற்றும் ஆக்சின் காட்சிகள் மிகப்பெரிய அளவில் பட்டை தீட்டின இதனால் இந்த திரைப்படம் தற்போது கோடிகளை குவித்து வருகிறது.

மேலும் மக்களுக்கும் பிடித்த படமாக மாஸ்டர் திரைப்படம் உருவெடுத்துள்ளது.

தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த மாஸ்டர் படம் கடந்த 29ஆம் தேதி அமேசான் பிரைம் -ல் மாஸ்டர் படம் வெளியானது தற்பொழுது அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படம் வெளியான நாளில் இருந்து தற்பொழுது வரும் மாஸ்டர் படத்தை பற்றிய செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்து வருகின்றன அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த கவின்.

மாஸ்டர் படத்தில் விஜய் JD கதாபாத்திரத்தில் வித்தியாசமான லுக்கில் இருந்திருப்பார் அதைப்போலவே கவினும் கட்டம் போட்ட சட்டை, கையில் காப்பு, காதில் ஹெட் செட் மாட்டி அச்சு அசல் விஜய் போலவே இருக்கும் பேன் மேட் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ  நீங்களே பாருங்கள்.

Leave a Comment