காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கர் மகள் திருமணத்திற்கு கெத்தாக வந்த கவின்,விஜய்சேதுபதி.. வைரல் புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். இவர் தமிழில் பெரும்பாலும் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தவர்.

மேலும் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மிக சிறப்பாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.எம்எஸ் பாஸ்கர் சமீபகாலமாக பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இருக்கக் காரணம் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற தகவலே வெளிவருகின்றன எம்எஸ் பாஸ்கர் அவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற ஒரு மகளும் ஆதித்யா என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

சமீபத்தில் எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 96 என்ற திரைப்படத்தில் இளம் விஜய் சேதுபதியாக நடித்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.

எம் எஸ் பாஸ்கர் போல அவரது மகன் ஆதித்யா சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். இவர்கள் இருவரை போலவே  தான் எம்எஸ் பாஸ்கர் மகள் ஐஸ்வர்யாவும் சினிமாவில் டப்பிங் செய்து வருகிறார் இவர் ரகுல் பிரீத் சிங் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்கு இதுவரை பல்வேறு படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றியுள்ளார்.

ஆக மொத்தத்தில் சினிமாவின் நம்பியே இந்த மூவரும் தற்பொழுது பயணிக்கின்றனர். ஐஸ்வர்யா பாஸ்கர் அகுல் என்பவருடன் நிச்சயதார்த்தம்  கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி நடைபெற்றது இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் கொரோன்னா பிரச்சனை காரணமாக திருமணம் சொன்ன தேதியில் நடத்த முடியாமல் போனது

இந்த நிலையில் இரு தம்பதிகளுக்கு இடையே தற்போது வரவேற்பு நடத்தப்பட்டது இதில் தமிழ் சினிமாவில் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் அதில் விஜய் சேதுபதி, கவின், சினேகா,  சந்தியா, குட்டி பத்மினி, எஸ் ஏ சந்திரசேகர் போன்ற பலரும் கலந்துகொண்ட நேர பொழுது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

Leave a Comment