“கவின்” திருமணத்திற்கு படையெடுத்த சினிமா பிரபலங்கள்.! அழகில் ஜொலித்த தனுஷ் பட நடிகை

Kavin : தமிழ் சினிமாவில் இன்று வளர்ந்து வரும் ஹீரோ கவின். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாடா திரைப்படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து கைவசம் ஊர் குருவி மற்றும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட கவின் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பல சீரியல்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கினார்.

பின் வெள்ளி திரையில் என்ட்ரி கொடுத்தார். அனால் அவர் நினைத்தது போல் இங்கு நடக்கவில்லை சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து பின் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்தார் அந்த படம் தான் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது.

அதன் பிறகு இவர் நடித்த படங்கள் சுமாராக ஓடியது இப்படி படிப்படியாக முன்னேறி தற்பொழுது வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் கவின் தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை நேற்று திருமணம் செய்து கொண்டார். அதன் புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் தொடங்கிய சினிமா பிரபலங்கள் வரை அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் ஆனால் ஒரு சில முக்கிய பிரபலங்கள் கவின் மோனிகா திருமணத்திற்கு சென்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

கவின் கல்யாணத்திற்கு இயக்குனர் நெல்சன், மாரி செல்வராஜ், விக்னேஷ் சிவன் உள்ளிட்டவர் வந்தார். மேலும் டாக்டர், டான், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா அருள் மோகன் கலந்து கொண்டார் மற்றும் ஒரு சில நடிகர். நடிகைகள் கலந்து கொண்டனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Kavin
Kavin

Leave a Comment