போனா வந்துதான் ஆகணும் வந்தா போய் தான் ஆகணும் என யாரை மறைமுகமாகக் கூறுகிறார் கவின்.

kavin implicitly tells that something will come and go :விஜய்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கவின். பின்னர் இதனை தொடர்ந்து நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் கடந்த ஆண்டு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 ல்  கலந்து கொண்டதன் மூலம்  இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். தற்போது பிக்பாஸிலிருந்து வெளிவந்த பின் இவர் பிகில் அமிர்தாவுடன் இணைந்து லிஃபட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் கவின் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தனது புது கெட்டப்பில் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் மீசை தாடி சேவ் பண்னுனதுக்கு காரணம் திரும்ப வளரும் என்ற காரணத்தால் தான் “போனா வந்துதான் ஆகணும். வந்தா போய் தான் ஆகும்” என குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவில் அவர் எதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

biggbosskavin-tamil360newz
biggbosskavin-tamil360newz

 

Leave a Comment