லாக்டவுனில் உடல் எடையை அதிகரித்து மீண்டும் வேட்டையனாக மாறிய கவின்.! வைரலாகும் புகைப்படம்.!

சரவணன் மீனாட்சியில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின் ஆவார். இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் பணியாற்றி கொண்டிருந்த நிலையில் வெள்ளித்திரையில்  இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்து தற்போது பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் கலக்கி வருகிறார் அதுவும் முக்கியமாக இளம்பெண்களுக்கு பிடித்தவராக திகழ்கிறார்.

இந்த நிலையில் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கவின் தற்போதெல்லாம் ஒரு சில புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்போது தனது உடம்பை ஏற்றி குண்டாக மாறியுள்ளார்.

இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சரவணன் மீனாட்சி வேட்டையன் போல் மீண்டும் மாறிவிட்டீர்கள் எனக் கூறி வருகின்றனர். இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம். புகைபடத்திற்கு பல பொழுது சாஞ்சுருச்சு..
வானம் கூட வாடிருச்சு.. கனவு கொஞ்சம் தேங்கிருச்சு.. பொழப்ப பாக்கணும் வழி வுடு.. என டைட்டில் வைத்துள்ளார்.

kavin.0431_108010368_2918155978295072_6685440139577822888_n (1)
kavin.

Leave a Comment