வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல வெளிவந்த “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம்..! இயக்குனருக்கு அப்படி என்னதான் கோவம்..!

kaval thurai ungal nanban movie review: சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம்தான் காவல்துறை உங்கள் நண்பன் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சுரேஷ் நடித்துள்ளார் மேலும் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ரவீனா நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை பி ஆர் டாக்கிஸ் கார்ப்பரேஷன் என்ற தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஆர் டி எம் இயக்கியுள்ளார்.

பொதுவாக சினிமாவில் அதிகம் பயன்படுத்தும் ஒரு கதாபாத்திரம் என்றால் அது காவல்துறை கதாபாத்திரம் தான். ஒரு சில திரைப்படங்களில் காவல்துறையை பெருமைப்படுத்தி எடுத்திருப்பார்கள் ஆனால் சில திரைப்படங்களில் காவல்துறையை சிறுமைப் படுத்தியும் எடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் இந்த கோரணா காலகட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மக்களுக்கு பல பொது சேவைகளை செய்து வருகிறார்கள் இந்நிலையில் இந்த திரைப்படம் வெளிவந்தது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் ஆகிவிட்டது.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் ஆரம்பத்தில் எதார்த்தமாக ஆரம்பித்துவிட்டு பின்னர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை இணைத்தது போல கோட்டை விட்டு விட்டார்கள். இவ்வாறு இந்த  கதையை தெரியாமல் எடுத்தாரா இல்லை இந்த இயக்குனர்க்கு காவல்துறை மீது கோபமா என்று தெரியவில்லை.

ஏனெனில் இந்த திரைப்படத்தில் இந்த இயக்குனர் ஒரு காவல்துறை அதிகாரி கூட நல்லவராக காண்பிக்கவில்லை இவ்வாறு இவர் செய்ததே இவர் திரைப்படத்தில் முக்கிய சறுக்கலாக காணப்படுகிறது.

இணையத்தில் காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்தின் ரேட்டிங் 2/5

kaval-thurai-ungal-nanban
kaval-thurai-ungal-nanban

Leave a Comment