விஜய் டிவி காற்றின் மொழி சீரியல் நடிகைக்கு காதலருடன் நடந்த திருமண நிச்சயதார்த்தம்.!! வைரலாகும் புகைப்படம்.

0

katrin mozhi serial actress got engage photo viral: விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது காற்றின் மொழி என்கின்ற சீரியல். இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இந்த சீரியலில் சஞ்சீவ் மற்றும் பிரியங்கா இணைந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்த சீரியலில் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வைஷ்ணவி ராஜேந்தர். இவர் சாய் விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தார். தற்போது வைஷ்ணவிக்கு சாய் விக்னேஸ்வருக்கும் அவர்களது குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.

பொதுவாகவே வைஷ்ணவி சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். எனவே வைஷ்ணவி அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் வைஷ்ணவிக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

vaishnavi_rajasekaran
vaishnavi_rajasekaran
katrin mozhi
katrin mozhi