சினிமாவில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் அந்தத் திறமைகளை தாண்டி லக்கு என்பது மிக முக்கியமான ஒன்று, அப்போதுதான் வாய்ப்புகள் தேடி வரும், அப்படி தானாக வாய்ப்பு தேடி வரும் பொழுது அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம், அவர்கள் தான் சினிமாவில் சாதனை செய்து வெற்றி அடைகிறார்கள், அந்த வகையில் நடிகை வெண்பாவும் வெற்றி அடைந்தவர்களில் ஒருவர்.
தமிழ் சினிமாவில் 2007 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் கற்றது தமிழ் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராம் இயக்கி இருந்தார் இந்து திரைப்படத்தில் ஜீவா நடித்து இருந்தார் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து இருந்தார், அதுமட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாஸ் அழகம் பெருமாள் ஆகியோரும் நடித்திருந்தார்கள் இந்த திரைப் படத்தில் அஞ்சலி நடித்த கதாபாத்திரத்தில் சிறுவயது அஞ்சலியாக நடித்தவர் வெண்பா.
நடிகை வெண்பாவிற்கு முதல் திரைப்படம்தான் கற்றது தமிழ், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, இதனைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு பள்ளி பருவத்திலேயே என்ற திரைப்படத்தில் வெண்பா ஹீரோயினாக நடித்தார், இதனைத் தொடர்ந்து காதல் கசக்குதய்யா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
மற்ற நடிகைகளைப் போல் வெண்பா அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருவார், அந்த வகையில் நடிகை வெண்பா தற்பொழுது போட்டோ ஷூட் நடத்திய ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டு வருகிறார்கள்.