காமெடியும் கலாட்டாவும் நிறைந்த காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் டிரைலர்.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவுள்ள திரைப்படம் தான் காத்து வாக்குல 2 காதல் . இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகிவுள்ளது.

பொதுவாக ரசிகர்கள் விரும்பும் ஒரு நடிகை ஒரு திரைப்படத்தில் நடித்தாலே அந்த திரைப்படத்தினை பார்ப்பதற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருவது வழக்கம் இவ்வாறு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அதோடு முக்கியமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இத்திரைப்படத்தில் காதல் நாயகனாக நடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே குஷி படத்தில் இருப்பது போல நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் எதிர்பாராதவிதமாக ஓடிவந்து விளக்கை அணைக்காமல் கை வைத்து மூடுகின்றனர்.

கொஞ்சம் டுவிஸ்ட்டாக மூன்றாவதாக விஜய் சேதுபதியும் அந்த விளக்கினை தனது கைகளால் மூடுகிறார். இந்த காட்சியை வைத்து இந்த திரைப்படம் எப்படிப்பட்ட கதை என்று சொல்லிவிடலாம்.  இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பாகுபலி, டைட்டானிக் போன்ற படங்கள் இடம்பெற்று வந்த ஹிட் காட்சிகளும் பாடல் காட்சிகளும் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருப்பதாகவும் என்டர்டைமெண்ட் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிறகு போகப்போக தான் நயன்தாரா குடும்ப குத்துவிளக்கு போன்ற காட்சியிலும் சமந்தா பிகினி உடையில் நடித்து இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் முக்கியமாக சமந்தா பேசும் டபுள் மீனிங் வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதனைத் தொடர்ந்து சமந்தா மற்றும் நயன்தாரா இருவருக்கும் பேசி புரிய வைக்கும் வகையில் விஜய் சேதுபதி டீ, காபி ஷாப் என கூட்டிக்கொண்டு அலைகிறார்.  இவ்வாறு இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது இத்திரைப்படம் மிகவும் காமெடியும்,கலாட்டாவும் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல ரசிகர்கள் இது விக்னேஷ் சிவனின் புதிய முயற்சியாக இருக்கிறது இது போன்ற படத்தை இதுவரை யாரும் யோசிக்கவில்லை.  என்று கூறி வருகிறார்கள் இதோ காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் டிரைலர்.

Leave a Comment