முரட்டு சிங்குல்களுக்கான காதலிக்க யாருமில்லை திரைப்படத்தின் கண்ணோட்டம்.!!

KATHALIKA YARUMILLAI-tamil360newz
KATHALIKA YARUMILLAI-tamil360newz

kathalika yarumillai movie review for murratu singles: ஹைவே காதலி என்ற குறும்படத்தை இயக்கி பிரபலமான, அறிமுக இயக்குனரான கமல் பிரகாஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் காதலிக்க யாருமில்லை. இந்த திரைப்படத்தை ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜன் தயாரிக்கிறார்.

காதலிக்க யாருமில்லை என்ற திரைப்படம் திகில் கலந்த ஃபேண்டசி காமெடி திரைப்படமாகும்.  மேலும் இந்த திரைப்படம் குறிப்பாக முரட்டு சிங்குல்களுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். எனவேதான் அந்த படத்தின் டைட்டிலில் இதை ஒரு டேக் லைன் ஆக வைத்திருப்பார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷும் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் ரைசா வில்சன் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சில முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, ராமர், சாரா,  ஆனந்தராஜ்,  கௌசல்யா, குரு சோமசுந்தரம் போன்றோர் நடித்துள்ளனர். இந்த திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் காமெடியன் செந்தில் அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் இசையமைக்க வெங்கடேஷ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிவா அவர்கள் படத்தொகுப்பையும்,  கமலநாதன் கலை பணிகளையும் மற்றும் டான் அசோக் சண்டைக் காட்சிகளையும் வடிவமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prakash-raiza-tamil360newz
Prakash-raiza-tamil360newz