யாமிருக்க பயமேன் திரைப்படத்தின் மிரட்டல் இயக்குனரின் அடுத்த படைப்பு. வெளியானது காட்டேரி திரைப்படத்தின் டிரைலர்

இயக்குனர் டிகே இயக்கத்தில் வெளியான யாமிருக்க பயமேன் திரைப்படத்தை தொடர்ந்து கவலை வேண்டாம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இதனை தொடர்ந்து தற்போது காட்டேரி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாதான் தயாரித்துள்ளார்,  படத்தில் வைபவ் ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா,  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா கால கட்டத்தில் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போனது. இந்தநிலையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காட்டேரி திரையரங்குகளில் வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்தநிலையில் காட்டேரி திரைப்படத்திலிருந்து இரண்டாவது டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது இந்த ட்ரைலர் நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது கண்டிப்பாக கதையை கணிக்க முடியாத அளவிற்கு வெளியாகியுள்ளது,  யாமிருக்க பயமேன் திரைப்படத்தின் இயக்குனர் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படமும் வெற்றியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் கிறிஸ்மஸ் நல்ல ட்ரீட்டாக அமையும் என டிரைலரை பார்த்த ரசிகர்கள் கூறுகிறார்கள். இதோ ட்ரைலர்

Leave a Comment