நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து பிறகு அரசியலில் ஈடுபட்ட அதிலும் சாதித்து வந்தவர். ஆனால் அரசியலில் வருவதற்கு முன்பே பல உதவிகளை செய்துள்ளார் அந்த வகையில் தனுஷின் அக்காவுக்கு மெடிக்கல் சீட்டு வாங்கி கொடுத்தது விஜயகாந்த் தான் இப்படி ஏகப்பட்ட உதவிகளை செய்து வந்த விஜயகாந்த் திமுக அதிமுக இரண்டு பெரிய கட்சியை எதிர்த்து அரசியலில் போட்டி போட்டார்.
தனித்து போட்டியிட்டு சில கணிசமான வாக்குகளை பெற்றார், பிறகு இரண்டு கட்சியும் அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்தது அதில் அதிமுக வென்றது ஆனால் அவர் அரசியலில் தொடர்ந்து இருக்க முடியவில்லை அதற்கு காரணம் உடல்நிலை சரியில்லாமல் போனதுதான். அறுவை சிகிச்சை செய்தும் ஆவரின் உடல்நிலை மோசமாக ஆனது பிறகு அரசியலில் இருந்து விலகினார் ஒரு காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் உயிர் பிரிந்தார் அவரின் இழப்பு தமிழ் நாட்டு மக்களை உருக்குலைக்க செய்தது.
நடிகை கஸ்தூரி சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பொழுது நடிகர்கள் அரசியலுக்கு வருவது காலகாலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு நடிகர் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதை விஜயகாந்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். தலைமை பண்பில் விஜயகாந்த் தான் கலைஞரோடு சேர்ந்து வளர்ந்தவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை சாப்பிட வைக்க அவருடைய உதவியாளர்கள் இழுத்து பிடிப்பார்கள்.
அதற்குக் காரணம் யாராவது உதவி கேட்டு வருவார்கள் இவரும் உதவி செய்து கொண்டே இருப்பார். யாருக்குமே இல்லை என்று சொல்ல சொல்ல மாட்டார் அவரை மாதிரி கேஷுவலாக நடிக்கவே முடியாது. இவ்வாறு கஸ்தூரி பேசியுள்ளார் இவர் மறைமுகமாக விஜய் தாக்குகிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.