வயசான காலத்தில் பிகினி தேவையா.? என்ற ரசிகரின் கமெண்டுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த கஸ்தூரி.!

0
kasturi
kasturi

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் நடிகை கஸ்தூரி அவர்களும் ஒருவர் இவர் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார் இந்த நிலையில் நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளார் கஸ்தூரி இதனை பார்த்த ரசிகர் ஒருவர் வயதான காலத்தில் இது தேவையா என கமெண்ட் செய்துள்ளார் இந்த கமெண்டுக்கு தனது பாணியில் கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் சினிமாவில் முதன்முதலாக ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து சின்னவர், செந்தமிழ் பாட்டு, உரிமை ஊஞ்சலாடுகிறது, அபிராமி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு பெரிதாக நடிக்காமல் இருந்த கஸ்தூரி மீண்டும் டிராபிக் ராமசாமி, தமிழ் படம் 2 ,வெல்வட் நகரம் தமிழரசன் ஆகிய திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமடைந்தார். இதில் தமிழ் படம் 2 ல் குத்துப் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.

மேலும் கஸ்தூரி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இவர் அடிக்கடி தனக்கு சட்டெனப்பட்ட கருத்தை பதிவிட்டு வருவார் அதுமட்டுமில்லாமல் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருபவர். அந்த வகையில் கஸ்தூரி வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அந்த வகையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கஸ்தூரி எந்த கருத்தை வெளியிட்டாலும் அது சர்ச்சையில் முடியும். அப்படி இருக்கும் நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பூங்காவனம் என்ற பாடலின் பின்னணியில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன இந்த வீடியோவிற்கு பல ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்டுகள் போட்டு வருகிறார்கள் இந்த நிலையில் நெடிசன் ஒருவர் வயசான காலத்துல இது தேவையா என கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை கஸ்தூரி ஆமாம் உங்க வயசுக்கு உங்களுக்கு தேவையே இல்லை போங்க போய் ராமாயணம் படிங்க என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த பதிவு ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்