பிரபல நடிகரை கேவலமாக விமர்சித்த நபரை கிழித்து தொங்கவிட்ட கஸ்தூரி.! யாருகிட்ட வச்சிக்கிறாங்க இதெல்லாம்

0

தற்போது சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கஸ்தூரி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். அந்த வகையில் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் பல நடிகர், நடிகைகளை விமர்சிப்பது. இல்லையென்றால் ரசிகர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் கேட்கும் கேள்விகளுக்கு தரமான பதிலடி கொடுப்பதும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் சித்தார்த் பல அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு மிகவும் சூப்பராக பதில்களை அளித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசுக்கு எதிரான பல கேள்விகளை எழுப்பியிருந்தார். அந்தவகையில் பல கட்சிகளும் இவருக்கு கொலை மிரட்டல் விடுவது இவரை கடுமையான வார்த்தையில் திட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக பொறுப்பற்ற அரசு என்று பல விமர்சனங்களை எழுப்பியுள்ளார் சித்தாரத்.எனவே பலர் இவரை திட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல யூடியூப் சேனல் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வசைபாடி, கூத்தாடி என பல கடுமையான வார்த்தைகளால் திட்டி இருந்தார்.இதற்கு கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அந்தவகையில் எதிரிகளையும் மதிப்பது தான் தமிழர்கள் நாகரிகம் அதை மறக்க வேண்டாம். இதற்கு ஏன் சித்தார்த்தின் தொழிலை இழுத்து பேசுகிறீர்கள். நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான் தான். நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி. சரியா? பாஜக ஆதரவு நடிகர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். சித்தார்த் கூறியது தவறுதான் அதற்காக அவரின் தொழிலை விமர்சனம் செய்யாதீர்கள் என்று கூறி மாரிதாஸ்க்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.