ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “காசேதான் கடவுளடா” பாடல் ரிலீஸ் தேதி எப்பொழுது தெரியுமா..? இணையத்தில் லீக்கான அப்டேட்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வருபவர் தான் நடிகர் அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இயக்குனர் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு வலிமை என்ற திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்பொழுது துணிவு என்ற திரைப்படத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி வைத்துள்ளார்கள்.

இவ்வாறு இவர்கள்  மூவரும் இணைந்த  ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது உருவாகியுள்ள துணிவு திரைப்படம் நல்ல வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் துணிவு திரைப்படம் வெளியாகும் அதே நாளில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளது.

இதனால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் அடித்துக் கொள்வது மட்டும் இல்லாமல் யாருடைய திரைப்படம் வெற்றி பெறும் என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் மேலும் வாரிசு திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியான நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படத்திலிருந்தும் “செல்லா செல்லா” என்ற பாடல் வெளியாகி வைரலாக பரவி வந்தன.

மேலும் இந்த பாடல் வாரிசு திரைப்படத்தை அடித்து நொறுக்கியது போல் அமைந்தது மட்டுமில்லாமல் தற்பொழுது அடுத்ததாக மற்றொரு பாடல்களையும் வெளியிடலாம் என துணிவு திரைப்படத்தின் பட குழுவினர்கள் முடிவு செய்துள்ளார்கள் அந்த வகையில் காசேதான் கடவுளடா என்ற பாடல் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள் தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.

மேலும் இந்த பாடல் வருகின்ற டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல் இது குறித்த உண்மையான  அதிகாரபூர்வமான அறிவிப்பை மிக விரைவில் போனிகபூர் அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment