கருப்பன் குசும்புக்காரன் காமெடி புகழ் தவசி கவலைக்கிடம்.!

0

சிவகார்த்திகேயன் நடித்து ஹிட்டான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த திரைப்படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்து வந்தவர் தவசி, இவர் சூரிக்கு  அப்பாவாக மட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தில் பூசாரியாகவும் நடித்திருந்தார், கருப்பன் குசும்புக்காரன் என்ற காமெடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது ரசிகர்களிடம்.

கருப்பன் குசும்புக்காரன் காமெடி புகழ் தவசி ராஜ்கபூர் இயக்கத்தில் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார், திண்டுக்கல் தேனி நெடுஞ்சாலையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது, இந்த சீரியலில் கலந்துகொண்ட தவசிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சீரியலில் கலந்து கொண்ட அவர் காரில் திரும்பி சென்ற பொழுது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்தது, இதில் அவருக்கு படுகாயம் அடைந்ததால் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.