கல்லாப் பெட்டியை நிரப்பும் “கார்த்தியின் சர்தார்” – இதுவரை அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

ரசிகர்கள் எப்பொழுதுமே வித்தியாசமான படங்களை அதிகம் எதிர்பார்க்கின்றனர் அதற்கு ஏற்றவாறு நடிகர் கார்த்தியும் தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இதனால் அவரது மார்க்கெட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது இவர் கடைசியாக நடித்த விருமன், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள்..

வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன இதனை தொடர்ந்து இயக்குனர் பிஎஸ் மித்ரனுடன் கைகோர்த்து கார்த்தி நடித்த திரைப்படம் சர்தார் இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படம் முழுக்க முழுக்க தண்ணீர் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையை எடுத்துரைக்கும் ஒரு படமாக இருந்தது படம் வெளிவந்து சிறப்பான விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இவருடன் கைகோர்த்து லைலா, ரஜிஷா விஜயன், முனீஸ் காந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.. படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெறுவதன்  காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் இதுவரை சர்தார் திரைப்படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி பார்க்கையில் சர்தார் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 60 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறதாம்.. தமிழகத்தில் மட்டுமே கார்த்தியின் சர்தார் திரைப்படம் 32 கோடி வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.. வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறையாது அதிகரிக்கும் என கூறப்படுகிறது..

இந்த தீபாவளியை முன்னிட்டு கார்த்தியின் சர்தார் படத்தை எடுத்து எடுத்து சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெளியானது ஆனால் அந்த படத்தை தற்போது பீட் பண்ணி சர்தார் திரைப்படம் வெற்றி நடை கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Comment