புதிய சிக்கலை சந்திக்கும் கார்த்தியின் “சர்தார்”.! ரூட்டை மாற்றி கெத்து காட்டும்படக்குழு.!

0

கொரோனா என்ற ஒற்றைச் சொல் உலகையே நடுநடுங்க வைக்கிறது  தற்பொழுது இரண்டாம் அலை வீசுவதால் இந்தியா தற்போது பெரிதும் பாதித்துள்ளது. இதனால் அரசு முன்னெச்சரிக்கை காரணமாக பலவற்றை தற்பொழுது நிறுத்தி வைத்துள்ளது ஊரடங்கி அமல்படுத்தி உள்ளது இந்த நிலையில் சினிமாவும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய படத்தை எடுக்க தயாரிப்பாளர்கள் பலரும் பணத்தை போட்டு விட்டு தற்பொழுது எடுக்கவும் முடியாமல் நிறுத்த முடியாமல் திக்கு முக்காடி வருகின்றனர் அந்த வகையில் தற்போது பல திரைப்படங்கள் என நிலைமை என்றே தெரியவில்லை.

ரஜினியின் அடுத்த படத்திற்கு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் மிகப்பெரிய பிரம்மாண்ட அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தினர் மேலும் vijay65 படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமான மால் ஒன்று தயாராகி வருகிறது இப்படி இருக்க கார்த்தி நடிப்பில் சர்தார் இந்த சிக்கலை சந்தித்து உள்ளது.

மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படக்குழு. சென்னையில் இரண்டு கோடி பொருட்செலவில் தற்போது ஒரு பிரம்மாண்ட அரங்கு அமைத்து அதில் படத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது மேலும் இதில் ராசி கண்ணா. ரஜிஷா விஜயன் போன்றோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தை தற்போது அரங்கம் அமைத்து எடுக்கப்பட உள்ளதால் ஆட்களை குறைத்துக் கொண்டு படத்தை திட்டமிட்ட நடத்த படக்குழு ஆர்வம் காட்டி உள்ளது.

ஒரு கட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்தால் படத்தை நிறுத்துவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை என முடிவு எடுத்து உள்ளது படக்குழு.