கார்த்தியின் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இத்தனை சாதனைகளை செய்துள்ளதா.? வசூலில் கோட்டை கட்ட போகும் சர்தார்.!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது என ரசிகர்கள் பலரும் பாராட்டி வந்தார்கள் கார்த்தி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவன் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார் அதிலும் குறிப்பாக அவர் பேசும் வசனங்கள் அனைத்துமே மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

கார்த்தி இந்த திரைப்படத்திற்கு முன்பு நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தது இவரது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மேலும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது எனவும் தகவல் கசிந்து உள்ளது.

நடிகர் கார்த்தி தனது முழு திறமையையும் காட்டி சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளாராம் மேலும் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக இவரது ரசிகர்கள் பலரும் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள் எனவும் தெரிய வருகிறது இதனை தொடர்ந்து சர்தார் திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே ஒரு சில சாதனைகளை செய்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் அந்த தகவல் என்னவென்று கேட்டால் சர்தார் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு டப்பிங்,ஓவர் சீஸ் போன்ற மொத்த விஷயங்களையும் சேர்த்து 64.6 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

karthi
karthi

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் கார்த்தியின் திரைப்படம் வெளியாகாமலே இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது எனவும் இந்தத் திரைப்படத்தை நாங்கள் பார்ப்பதற்கு மிக ஆவலாக இருக்கிறோம் எனவும் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment