விட்டதை பிடிக்க மீண்டும் சினிமாவில் களமிறங்கும் “கருவா பையா கருவா பையா” பாடல் நடிகை கார்த்திகா.!

தூத்துக்குடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார் கார்த்திகா. இத்திரைப்படத்தின் அடுத்தது மூலம் இவரை தூத்துக்குடி கார்த்திகா என்று அழைக்கப்படும் அளவிற்கு பேமஸ் ஆகி விட்டார்.

அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இப்படத்தில் உள்ள ” கருவா பையா” என்கிற பாடலின் மூலம் ரசிகர்கள்  மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.  அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

karthika
karthika

அதன்பிறகு ” பிறப்பு” என்ற திரைப்படத்தில் அமைந்துள்ள” உலக அழகி நான் தான்” என்ற பாடல் அந்த சமயத்தில் பெண்களுக்கு ஏற்றவாறு அமைந்தது.

இடையில் நீண்ட வருடம் கழித்து மீண்டும் திரையுலகில் நுழைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி கார்த்திகா நம்மிடம் கூறியது என்னவென்றால்  தனது தங்கையின் படிப்புக்காக மும்பை சென்று தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

அப்போதும் சில  படங்களில் நடிக்க அழைப்பு வந்தும் ஏற்க முடியாத நிலையில் இருந்தேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment