பொதுவாக நடிகர்கள் என்றாலே 60 வயதானாலும் கூட சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வர முடியும். அந்த வகையில் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவருக்கு வயதானாலும் கூட தற்போது உள்ள முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுத்து வருகிறார். அந்த அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கால உட்பட இன்னும் சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது இவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்பொழுது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படத்தில் 80-90 காலகட்டத்தில் சினிமாவில் முன்னணி நடிகைகளாக கலக்கி வந்த குஷ்பு மற்றும் மீனா இவர்களை தொடர்ந்து தற்பொழுது டாப் நடிகைகளான நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்ட இன்னும் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இவர்களை தொடர்ந்து தற்போது சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஒருவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அது வேறு யாரும் இல்லை அர்ஜய் தான் இவர் தற்பொழுது அண்ணாத்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

மேலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ரஜினியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிய உள்ளதாகவும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் தீபாவளியன்று வெளியாகும் என்று கூறியுள்ளார்கள். இத்திரைப்படத்தில் டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.