தனது அடுத்த படத்தின் டைட்டிலை போஸ்டருடன் வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்.!

0

வெள்ளித்திரையில் தயாரிப்பாளர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டு வலம் வருபவர் தான் கார்த்திக் சுப்புராஜ் இவரது இயக்கத்தில் வெளியான எல்லா திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கண்டிப்பாக பெற்றிருக்கும் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் பல படங்களில் ஒரு திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதள பக்கங்களில் சற்று முன் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

ஆம் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இயக்குனர் அசோக் வீரப்பன் என்பவர் இயக்கும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வைபவ் நடித்து வருகிறாராம் மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு பபூன் என்ற தலைப்பை சூட்டி உள்ளார்கள்.

இதனையடுத்து இந்த திரைப்படத்திற்காக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவும் மற்றும் குமார் தங்கப்பன் என்பவர் கலை இயக்கம்,வெற்றி கிருஷ்ணன் என்பவர் படத்தொகுப்பு பணியையும் செய்து வருகிறார்கள் இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Vaibhav
Vaibhav

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வைபவ் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வைபவ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் நடித்து வரும் சியான் 60 படத்தின் பணிகளும் கூடிய சீக்கிரம் முடிய உள்ளதாக கூறப்படுகிறது.