விக்ரம் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தமிழ் திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் சியான் விக்ரம் மேலும் இவரது மகனான துருவ் விக்ரமும் தற்போது ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

சமீப காலமாகவே சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய 2 பேரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர் என்று ஒரு தகவல் எப்போதே வெளியாகின.அதுகுறித்து தற்போது ஒரு தகவல் இணையதளத்தில் கசிந்து வெளிவந்துள்ளது.

ஆம் அந்த தகவலியில் இவர்கள் நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளாராம் மேலும் இந்த படத்தில் சிம்ரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அது மட்டுமல்லாமல் 7ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க போகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம் வில்லனாகவும் அவரது மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது.நடிகை வாணி போஜன் இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் வாணிபோஜன் இந்த திரைப்படத்தில் நடிப்பாரா நடிக்க மாட்டாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment