கார்த்திக் சுப்புராஜ் – தனுஷ் படத்தின் உரிமையை தட்டி தூக்கிச்சென்ற முன்னணி நிறுவனம் இதோ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் D40 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் கசிந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்தநிலையில் இந்த திரைப்படத்திற்கு சுருளி என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் பரவின.

மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வருகின்ற 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள், இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் தமிழக உரிமையை ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பிரமாண்ட தொகைக்குப் பெற்றுள்ளது, இதனை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இப்படத்தின் கேரளா உரிமையை Anto ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் தெலுங்கானா, ஆந்திர பிரதேஷ் உரிமையை GA2 Pictures மற்றும் யூ.வி கிரேஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஓவர் சீஸ் உரிமையை தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையை Ap இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment