செம்பருத்தி சீரியலில் மீண்டும் களம் இறங்கப் போகும் கார்த்திக்ராஜ் இன்ஸ்டா வில் பதிவிட்ட பதிவை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டம்.!

0
karthik raj
karthik raj

மக்களுக்கு தொலைக்காட்சியில் மிகவும் பிடித்த நிகழ்ச்சிகள் என்றால் அது பிக் பாஸ் மற்றும் சின்னத்திரை சீரியல்கள் தான் அதிலும் குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த சீரியலில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் மற்றும் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகை ஷபானா நடித்து வந்தார்கள்.

ஆனால் ஒரு சில காரணங்களால் கார்த்திக்ராஜ் இந்த சீரியலை விட்டு விலகுவதாக முதலில் அறிவித்திருந்தார்.பின்பு ஒரு சில நாட்கள் கழித்து அந்த சீரியலில் இருந்து அவர் விலகி விட்டார் என்ற தகவல் ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.

மேலும் அந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் வேற ஒரு நடிகர் நடித்து வந்தார் ஆனால் கார்த்திக்ராஜ் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை இந்நிலையில் மறுபடியும் அந்த சீரியலில் கார்த்திக் ராஜ் காலடி எடுத்து வைக்க போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

அந்தப் பதிவில் அவர் ஒரே சூரியன்,ஒரே சந்திரன்,ஒரு  நயம் என்று பதிவிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் பலரும் மறுபடியும் நீங்கள் இந்த சீரியலில் நடிக்க வருகிறீர்களா எங்களுக்கு மிகவும் சந்தோஷம் என கூறி வருகிறார்கள்.

karthik raj
karthik raj