விஜயுடன் சூப்பர் ஹீரோ திரைப்படம் பிரபல இளம் இயக்குனர் அதிரடி கருத்து.

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவர் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்நிலையில் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என பல இயக்குனர்களின் கனவாக இருக்கிறது.

தமிழில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், இவர் தற்பொழுது அருண் விஜய்யை வைத்து மாபியா திரைப்படத்தை இயக்கியுள்ளார், இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருண் விஜய் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளார்கள், கார்த்திக் நரேன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அந்தப் பேட்டியில் தான் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் 40 நாட்களுக்குள் முடிவடைந்து விடும் என வெளிப்படையாக பேசினார், மாபியா திரைப்படத்தில் பற்றிய பல சுவாரசிய கருத்துக்களை வெளியிட்ட கார்த்திக் நரேன் இடம் தளபதி 65 படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த மாதிரியாக படம் இருக்கும் என தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு கார்த்திக் நரேன் நான் மிகப்பெரிய காமிக்ஸ் ரசிகர் பேட்மேன் படத்தில் ப்ரூஸ் வெய்ன் கதாபாத்திரம் போல விஜய் சாருக்கு ஒரு சூப்பர் ஹீரோ படம் செய்ய வேண்டும் என ஆசை என தனது ஆசையை வெளிப்படையாகக் கூறினார்.

இதிலிருந்து தெரிகிறது கார்த்திக் நரேன் விஜய்யை வைத்து இயக்கினால் கண்டிப்பாக சூப்பர் ஹீரோ திரைப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment