கார்த்திக்-19 கெட்டப் போட்டோவை நீங்கள் பார்க்க முடியாது என கூறி டைட்டிலை லீக் செய்த ராஷ்மிகா மந்தனா.! படக்குழு அதிர்ச்சி

0

கார்த்திக் நடித்து வரும் கார்த்திக் 19 திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது, இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் தான் இயக்கி வருகிறார், அவர் இயக்கும் இரண்டாவது படம் ஆகும். கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

படத்தில் எடிட்டராக ரூபனும் ஒளிப்பதிவு சத்தியன் சூரியன், மேலும் காமெடி நடிகராக யோகி பாபு நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் டைட்டில் சுல்தான் என கிசுகிசு வெளியானது, ஆனால் படக்குழு இதனை மறுத்து இன்னும் கார்த்திக் 19 என்ன தான் கூறி வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் மார்ச் மாதம் தொடங்கிய இந்த திரைப்படத்தின் சூட்டிங் படப்பிடிப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு புகைப்படமும் வெளியாகமல் பாதுகாத்து வருகிறார்கள் படக்குழு.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் நடிகை ராஷ்மிகா சுல்தான் நான்காவது நாள் சூட்டிங் என்றும் இதன் கெட்ட போட்டோவை நீங்கள் பார்க்க முடியாது என ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார் தனது இன்ஸ்டாகிராமில், இதை பார்த்த ரசிகர்கள் என்ன மேடம் உங்களின் லுக் எப்படி என்று சொல்லாமல் உஷாரா இருக்கிறீர்கள் ஆனால் படத்தின் தலைப்பை நீங்களே லீக் செய்து விட்டீர்களே என கலாய்த்து வருகிறார்கள்.

Insta-story-of-Rashmika-Mandanna
Insta-story-of-Rashmika-Mandanna