பல கெட்டப்பில் கலக்கும் கார்த்தி.! வெளியானது சர்தார் திரை விமர்ச்சனம்…

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை பிஎஸ் மித்ரன் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் தீவாளி முன்னிட்டு வெளியாகி உள்ள சர்தார் படத்தின் திரைவிமர்சனம் எப்படி இருக்கிறது என்று தற்போது நாம் பார்ப்போம்.

சென்னை மாநகரத்தின் போலீஸ் அதிகாரியாக கார்த்தி அவர்கள் அதாவது விஜயகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிகவும் பிரபலமான போலீஸ் அதிகாரியாகவும் தன் கையில் எடுக்கும் வழக்குகளை ட்ரென்ட் ஆகும்படியான செயல்களை செய்கிறார். அப்படியாப்பட்ட கார்த்திகை தனக்கு சிறுவயதில் இருந்து நன்றாக தெரிந்த வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் ராசி கண்ணாவை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார்.

மறுபக்கம் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் விற்கப்படும் பல்வேறு அவலங்களை எதிர்த்து போராடி வருகிறார் நடிகை லைலா. அதன் பிறகு அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு பைல் திருடப்படுகிறது. அதன் பிறகு இந்த பைலை திருடியது லைலா தான் என்பது கண்டுபிடித்து பின் தொடருகின்றார்  கார்த்தி.

அதன் பிறகு லைலாவின் மகனுடன் கார்த்தி அவர்கள் லைலாவை தேடி செல்கின்றனர் அப்போது அவர் இறந்து போனது தெரிய வருகிறது. அப்போது லைலா தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்த கார்த்தி இதற்கு பின்னால் இருக்கும் சம்பவங்களை வைத்து ஆராய தொடங்குகிறார்.

அதன் மூலம் குடிநீர் வியாபாரம் இந்தியா முழுக்க ஒரு வழி குடிநீரை அமைத்து அதை மக்கள் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட உள்ள விஷயம் லைலா சேகரித்து வைத்திருந்த வீடியோவின் மூலம் தெரிந்து கொள்கிறார் கார்த்தி.

இது அனைத்திற்கும் பின்னால் வாட்டர் மாப்யா இருக்கிறது என்றும் சிறையில் இருக்கும் சர்தார் என்கிற உளவாளியை வெளியே கொண்டு வர முயற்சி செய்தார் லைலா என்றும்  அதை கார்த்தி அவர்கள் தெரிந்து கொண்டார். சிறையில் இருக்கும் சர்தார் யார் அவர் எப்படி இந்தியாவிற்கு வந்து வாட்டர் மாஃபியாவுக்கு எதிராக தனது மகனுடன் தடுத்து நிறுத்துகிறார் என்பது மீதமுள்ள கதை.

தற்போது ரசிகர்கள் விமர்சனம்:-

கார்த்தியின் நடிப்பு, சர்தார் வரும் காட்சிகள், படத்தின் திரைக்கதை, எடுத்துக் கொண்ட தலைப்பு, சர்தார் பிளாஸ் பேக், அனைத்தும் இந்த திரைப்படத்தில் செமையாக இருந்தது. இந்த திரைப்படத்திற்கு ஒரே ஒரு மைனஸ் பாயிண்ட் தான் அதாவது படத்தின் முதல் 10 நிமிடமும் திணிக்கப்பட்ட பாடல்கள் தான் இந்த படத்திற்கு ஒரு மைனஸ் பாயிண்டாக விளங்குகிறது என்று கூறி வருகின்றனர்.

மத்தபடி பிளாஸ்டிக் குடிநீர் குறித்த விழிப்புணர்வை அழகாக கூறியுள்ளார் இந்த படத்தின் இயக்குனர் இதனால் இந்த தீபாவளி சர்தார் தீபாவளி தான் என்று கூறி வருகின்றனர்.

Leave a Comment