யாருடா… 100 தல ராவணன்.! அதிரடி சண்டைகளுடன் வெளியானது கார்த்தியின் சுல்தான் ட்ரைலர்.!

தமிழ் சினிமா உலகில் நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு நடிக்க வந்தவர் தான் கார்த்திக் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் தனது விடா முயற்சியை விடாமல் தொடர்ந்து பலஹிட் திரைப்படங்களில் நடித்து பல திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்ததன் மூலம் ரசிகர்களிடையே தற்போது உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை,கடைக்குட்டி சிங்கம்,தேவ்,கைதி போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கார்த்திக் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் கார்த்திக் உடன் இணைந்து பல சினிமா பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தை பற்றி ஏதாவது ஒரு அப்டேட் ரசிகர்கள் வெளிவருமா என காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.

ஆம் அந்த அப்டேட் என்னவென்று கேட்டால் சுல்தான் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் கார்த்திக் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் கார்த்திக் வேற லெவலில் நடித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும் அவ்வளவு அருமையாக ட்ரெய்லர் இருக்கிறது என பல ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கூறி வருகிறார்கள்.

இதோ அந்த ட்ரெய்லர் .

Leave a Comment