வித்தியாசமான கதையில் புதிய கெட்டப்பில் இருக்கும் கார்த்தி.! படம் பெயரே வித்தியாசமா இருக்கே..

பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகர் தான் கார்த்தி இவர் இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்று விலங்கினார் மேலும் இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அப்பொழுது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

இதனை தொடர்ந்து பார்த்தால் பல வித்தியாசமான கதைகளில் நடிகர் கார்த்தி நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ்,இயக்குனர் H.வினோத் போன்ற பல இயக்குனர்களும் இவரை வைத்து படம் எடுத்த பிறகுதான் மிகவும் தமிழ் சினிமாவில் வளர்ந்து நின்றார்கள்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வித்தியாசமான கதைகளம் கொண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஜப்பான் இது குறித்து புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதில் இந்த திரைப்படம் முழுவதுமே தங்கம் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் மக்களிடையே பேராதரவை பெற்றுவிட்டது.

அதனை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் ஒரு சில திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வந்த நிலையில் இப்படி ஒரு அப்டேட் கிடைத்த நிலையில் அவர்கள் தற்பொழுது கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் ஜப்பான் திரைப்படத்தில் கார்த்தி வேற லெவலில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

karthi
karthi

Leave a Comment