ஏகே 61 திரைப்படத்துடன் தில்லாக மோதும் கார்த்தி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் கார்த்திக் இவர் தற்போது மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்குமார் இவரும் தற்போது AK61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என பலராலும் எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தினத்தில் கார்த்திக் நடித்து வரும் சர்தார் திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் நடித்து வரும் சர்தார் திரைப்படம் விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் .தற்போது சர்தார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தில் சர்தார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

karthi ajith
karthi ajith

மேலும் அஜித்தின் AK 61 திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார்த்திக் திரைப்படமான சர்தார் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதால் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் அவர்கள் இந்த திரைப்படத்தில் வித்தியாசமான இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா,சிம்ரன்,ரஜிஷா விஜயன்,உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Leave a Comment