ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடித்த விருமன் கார்த்தி.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. மேலும் தற்போது விருமன்  திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி அவர்கள் பருத்திவீரன் படத்திற்கு முன்பாகவே தனது அண்ணன் சூர்யா அவர்கள் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில்  ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி வைரல் ஆகி வருகிறது.

மணிரத்தினம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் இவர்கள் நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் கார்த்தி அவர்கள் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளதாக வைரளாகி ஆகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் கார்த்தி அவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் நடித்துள்ள விருமன் திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

நடிகர் கார்த்தி தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் அறிமுகமான இயக்குனரின் மகள் அதிதி சங்கர் அவர்களுடைய நடிப்பும் ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் அறிமுகமான முதல் படத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடியுள்ளார் இந்த பாடலும் இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்றும் ரசிகர்கள் அவரை பூரித்துப் பார்க்கின்றனர். இது ஆயுத எழுத்து பத்தில் நடித்த கார்த்தியின் புகைப்படம்

ayutha ezhuthu
ayutha ezhuthu

Leave a Comment