வசூலை வாரி குவித்த கர்ணன்.! முதல் வாரத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா.?

0

நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம் என்பதற்கு சமீபத்தில் உதாரணமாக விளங்குபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். ஜீவா நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்தார். அந்தவகையில் பரியேறும் பெருமாள்  சமூகத்திற்கு தேவையான கருத்தை மையமாக வைத்து இயக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் திரைப்படத்தையும் இவர் தான் இயக்கினார். இத்திரைப்படம் சமூகத்தில் நடைபெறும் பெரிய பிரச்சனைகளை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என்று அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.அதோட மாரி செல்வராஜிக்கு பலர் பாராட்டுகளை கூறிவருகிறார்கள். இவ்வாறு மக்கள் அறிய வேண்டிய கருத்துக்களை மையமாக வைத்து  இயக்கப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

அந்தவகையில் கர்ணன் திரைப்படத்தின் மூலம் தனுஷின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. இந்நிலையில் தற்பொழுது தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கர்ணன் திரைப்படம் ரிலீஸ்சாகி இன்று வரையிலும் ஒரு வாரம் முடிந்து விட்டது. அந்த வகையில் தற்போது வரையிலும் இத்திரைப்படம் ரூபாய் 2.96 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  அதோடு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.