மிரட்டலான கர்ணன் டீசர் எப்பொழுது.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக்கொண்ட நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தனுஷ் இவரது நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது முதலில் அந்தராங்கிரே மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

அந்தராங்கிரே திரைப்படத்தின் புஜ்ஜி பாடல் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்துள்ளது என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இதனையடுத்து தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கினார் அதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து தற்போது கர்ணன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வெளியாக உள்ளது என ரசிகர்களுக்கு ஒரு தகவல் ஏற்கனவே இணையதளத்தில் வைரலாகி வந்தது.

இதனையடுத்து கர்ணன் திரைப்படத்தின் டீசர் வரும் 23ஆம் தேதி வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டீசர் எப்பொழுது வெளியாகும் என உறுதியான தகவல் வைரலாகி வருகிறது.

ஆம் கர்ணன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 7.01 மணிக்கு வெளியாகும் என போஸ்டருடன் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தகவல் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment