கர்ணன் திரைப்படத்தில் இந்த முக்கிய காட்சியை கவனித்தீர்களா.! பலருக்கும் தெரியாத தகவல்.

0

தற்பொழுது தமிழ், மலையாளம், தெலுங்கு போன்றவற்றில் பிரபலமடைந்து இதன் மூலம் பாலிவுட் மற்றும் ஹோலிவுட் என இந்திய அளவில் பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ்.

தற்பொழுது இவர் கோலிவுட்டில் த கிரேட் மேன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை உலக அளவில் பிரபலமடைந்து உள்ள அவெஞ்சர்ஸ் குழுவினர்கள் தயாரித்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் கர்ணன் திரைப்படம் சமூகத்தில் நடைபெறும் பெரும் பிரச்சனையை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவானது.

இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு ரெடியாக இருந்து வருகிறது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமல் ஓடிடி வழியாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சியில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  அதாவது கர்ணன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இறந்தவர்களின் முதியவர்கள் போட்டோவை வைத்து கும்பிடுவார்கள்.

அதில் புகைப்படத்தில் இருக்கும் முதியவரின் புகைப்படம் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. தற்பொழுது அந்த புகைப்படம் இணையதளத்தில் ரசிகர்கள் வைரளாக்கி வருகிறார்கள்.

karnan
karnan