நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் திரைப்படம் சமீபகாலமாக மாபெரும் வெற்றி பெற்று வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகிய திரைப்படம் கர்ணன் இந்த திரைப்படம் திரையரங்கில் வெற்றி நடை போட்டு வருகிறது.
வசூலில் பல சாதனைகளை படைத்த இந்த திரைப்படம் தனுஷ் வாழ்க்கையில் சினிமா திரைப்பயணத்தில் புதிய மைல்கல்லாக அமைந்துவிட்டது. இந்த திரைப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல பிரச்சினைகளை சந்தித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் ஆனால் அதற்கான விளக்கத்தை படக்குழுவினர் வெளியிட்டு வந்தார்கள்.
இந்த திரைப்படம் அதேபோல் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என ஏற்கனவே பலமுறை படித்திருப்பீர்கள். படத்தில் தனுஷுடன் இணைந்து ஒரு உருவம் வரும் அந்த உருவத்தை யாராலும் மறக்க முடியாது ஏனென்றால் அந்த உருவம் படத்தின் இடையில் வந்து பார்ப்பவர்களை திகிலில் மிரட்டும் படி அமைந்திருக்கும்.
ஆனால் அந்த உருவம் எதற்காக வருகிறது என பலருக்கு புரியாத புதிராக இருந்துள்ளது அதற்கான விடை தற்போது தெரிந்துள்ளது அதாவது அந்த வீட்டில் திருமணம் ஆவதற்கு முன்பு ஒரு இளம் வயது பெண் இறந்து விட்டதால் அந்த பெண்ணை கன்னி அம்மன் ஆக குடும்ப தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருகிறார்கள்.
இந்த கலாச்சாரம் திருநெல்வேலியில் காலங்காலமாக இருந்து வருகிறது அதைதான் மாரிசெல்வராஜ் இந்த திரைப்படத்தில் தத்ரூபமாக கொண்டு வந்துள்ளார் அந்த பொம்மை கதாபாத்திரத்தில் ஒரு குழந்தை நடித்துள்ளார் அந்த சிறுமியின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே நடுரோட்டில் வலிப்பு வந்து இறந்ததுபோல் காட்டியிருப்பார்கள் மாரி செல்வராஜ். அப்படி இருந்தும் பெரும்பாலும் அந்த குழந்தையின் முகத்தை பார்த்திருக்க மாட்டார்கள் அந்த குழந்தையின் பெயர் தான் பூர்வ தாரணி தற்பொழுது அந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
