தனுஷின் கர்ணன் திரைப்படத்தில் நடித்ததால் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.! அடுத்து எந்த முன்னணி நடிகருடன் தெரியுமா.?

சமீப காலங்களாக தனுஷ் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விடுகிறது.  தற்போது இவர் ஹோலிவுட்டில் தி கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை உலகப் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் படக்குழுவினர்கள் தயாரித்து வருகிறார்கள்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.

இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  அதோடு இத்திரைப்படம் பெரும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து இயக்கப்பட்டு இருந்தது.  அந்த வகையில் இத்திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ரஜிஷா விஜயன்.

பொதுவாக ஒரு சில நடிகைகள் தங்களது முதல் திரைப்படத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைவார்கள். அந்த வகையில் தான் ரஜிஷா விஜயனும்  பிரபலம் அடைந்துள்ளார். இதுதான் இவரின் முன்னணி நடிகருடன் நடிக்கும் முதல் படமாக இருந்தாலும் இவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

எனவே தற்பொழுது உள்ள பல நடிகைகள் இவரின் மீது பொறாமையில் இருந்து வருகிறார்கள். ஏனென்றால் முதல் திரைப்படத்தை தொடர்ந்து 2வது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்பொழுது நடிகர் சூர்யா ஞானவேல் இயக்கும் பெயரிடாத ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.  சமீபத்தில் சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் இருக்கும் புகைப்படமும் இணையதளத்தில் வெளி வந்துள்ளது.

இதற்கு முன்பு சூர்யாவின் திரைப்படமான ஒருவன் திரைப்படத்தையும் ஞானவேல் தான் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்து வருகிறார்.  இத்திரைப்படத்தில் தான் ரஜிஷா விஜயன் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

rajisha-vijayan 1
rajisha-vijayan 1

கண்டிப்பாக ரஜிஷா விஜயன் இத்திரைப்படத்தில் நடிக்கிறார்.  ஆனால் சூர்யாவிற்கு ஜோடியாகவா? இல்லையா? என்று சரியாக இன்னும் தகவல் வெளி வரவில்லை. இருந்தாலும் தனது இரண்டாவது படமே பிரபல முன்னணி நடிகர் திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது  பெரிய விஷயம் தான்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment