தென்னிந்திய சினிமாவில் நடிகராக வலம் வலம் வந்தவர் நடிகர் கரண் இவர் சிறு வயதிலிருந்து நடிக்க தொடங்கி விட்டார். கமலஹாசனை நம்மவர் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார் அதேபோல் கொக்கி திரைப்படம் மூலமாக தமிழ் திரைப்படத்துறையில் கதாநாயகனாக நடித்த தொடங்கினார்.
அதேபோல் இவர் கதாநாயகனாக கருப்புசாமி குத்தகைக்காரர், காத்தவராயன், ஆகிய திரைப்படங்களில் நடித்தார் ஆனால் பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை. பெரிதாக காரன் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தான் பிரபலமடைந்தார்.
பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தமிழில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
2006 ஆம் ஆண்டு டி நகரில் ஒரு கடையில் ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு வைப்பாங்க நான் கொக்கி படம் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது படத்துக்காக ஒரு காட்சியில் ரோட்டு கடையில் ஐந்து ரூபாய் கொடுத்து உண்மையாவே சாப்பிட்டேன்..
ஐந்து ரூபாய் சாப்பாடு கொடுக்கறாங்கன்னு சுவையா இருக்குன்னு நாம நினைக்கிறோம் ஆனால் சாப்பாடு கிடைச்சா போதும்னு சாப்பிடுறவங்க நிறைய பேர் இருக்கிறாங்க அவர்களை நினைக்கும் போது உண்மையாவே அந்த காட்சியில் கண் கலங்கிடுச்சு என நடிகர் கரன் கூறியுள்ளார்.