இந்திய அணியில் கபில்தேவுக்கு பிடித்த இரண்டு ஆல்ரவுண்டர்கள்இவர்கள் தானாம் – பாண்டியா கிடையாதாம்.!

0
kapil dev
kapil dev

இந்திய அணியில் பல்வேறு அதிரடி ஆட்டக்காரர்கள் சிறந்த பவுலகள் என இருந்தாலும் ஆல்ரவுண்டர் என்ற ஒரு இடத்தில் மட்டும் இந்திய அணி தற்போது கோட்டை விட்டு வருவதாக தெரியவந்துள்ளது ஆனால் நிரந்தர இடத்தை பிடிக்காமல் அவ்வப்போது மாறிக் கொண்டே இருப்பது மற்றும் அந்த ஆல்ரவுண்டர் சரியான பிட்னஸ் இல்லாமல் இருப்பது.

இந்திய அணிக்கு பலத்த பின்னடைவை கொடுப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கபில்தேவ் எனக்கு பிடித்த ஆல்ரவுண்டர்கள் இருவர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார் மேலும் அவர் பேசியது : எனக்கு பாண்டியாவை பிடிக்கும் ஆனால் அவர் தற்போது ஆல்ரவுண்டர் கிடையாது என தெரிவித்துள்ளார்.

காரணம் அவர் சமீப காலமாக உடம்பு பிட்னஸ் ஆக இல்லாததால் அவரால் பந்து வீச முடியவில்லை. எனவே அவர் ஃபிட்னஸ் இருப்பதோடு மட்டுமில்லாமல் பந்து வீச்சிலும் அசத்தினால் மட்டுமே அவரை ஆல்-ரவுண்டராக எடுத்துக்கொள்ள முடியும் அதுவரை அவர் ஆல்ரவுண்டர் கிடையாது என கூறி உள்ளார் கபில்தேவ்.

தற்போது இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியவர்கள் தான் எனக்குப் பிடித்த ஆல்ரவுண்டர் என கூறியுள்ளார் இந்த இடத்தை அதிகமாகப் திறமையை காட்டினால் மட்டுமே அவர் ஆல்-ரவுண்டராக மாறி முடியும் என மறைமுகமாக சாடியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா சமீபகாலமாக ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரி கடைசியாக நடந்த 20 ஓவர் உலக கோப்பையிலும் பெரிய அளவில் விளையாட வில்லை மேலும் பந்துவீசும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது அப்படி இருக்கையில் அவரை எப்படி ஆல்-ரவுண்டராக மதிப்பிட முடியும் என்பது கபில் தேவின் கருத்தாக இருந்து வருகிறது.