நீச்சல் உடையில் அதகளம் பண்ணும் கண்ணான கண்ணே சீரியல் நடிகை.! ஆட்டம் காணும் இணையதளம்..

பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு இல்லத்தரசிகளும் ரசிகர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் சினிமா நடிகைகளைப் போல் சீரியல் நடிகைகளும் போட்டோ ஷூட் நடத்தி மிகவும் பிரபலமாகி வருகிறார்கள்.

அப்படி இருக்கும் வரையில் சன் தொலைக்காட்சியில் தனுஷ் இயக்கத்தில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்தான் கண்ணான கண்ணே சீரியல் இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை நித்யா தாஸ். இவர் மலையாள சினிமா மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இந்த நிலையில் தற்போது இவர் சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சியாம் நடிப்பில் வெளியாகிய மனதோடு மழைக்காலம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் பொன் மேகலை என்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். என்னதான் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக முடியவில்லை.

இனி வெள்ளி திரையை நம்பியிருந்தால் மோசம் போய் விடுவோம் என எண்ணி சின்னத்திரையில் படையெடுக்க ஆரம்பித்தார். பொதுவாக வெள்ளித்திரையில் பட வாய்ப்பு குறைந்த உடன் பல நடிகைகளும் சின்னத்திரையில் படையெடுப்பார்கள் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா. இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த இதயம் பைரவி ஆகிய தொடர்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் கண்ணான கண்ணே என்ற தொடரில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பார்ப்பவர்களை தனது பக்கம் கட்டி இழுத்து வருகிறார். இவர் கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக நடித்து வருகிறார் இவருக்கு வெறும் 36 வயது தான் ஆகிறது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

kannana kanne
kannana kanne

என்னதான் இவர் அம்மாவாக நடித்தாலும் மிகவும் இளமையாக கொஞ்சம் கூட அழகு குறையாமல் கொள்ளை அழகுடன் வலம் வருகிறார் இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்துவருகிறார். அந்த வகையில் தன்னுடைய குடும்பத்துடன் நீச்சலுடையில் சில புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

குடும்பத்துடன் நீச்சல்குளத்தில் ஆட்டம் போட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சன் தொலைக்காட்சியில் கண்ணான கண்ணே சீரியலில் நடித்த யமுனாவா இது என ஆச்சரியம் அடைந்து வருகிறார்கள்.

kannana kanne
kannana kanne

Leave a Comment