சன் டிவி கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வரும் யுவாவின் மனைவியா இது.! அழகில் ஹீரோயினையே ஓரங்கட்டுவார் போல.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் கண்ணான கண்ணே சீரியலில் நடித்துவரும் யுவாவின் மனைவியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக ஒவ்வொரு தொலைக்காட்சியும் டி ஆர் பி யில் முதலிடத்தை பெறுவதற்காக புதிய புதிய சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சமீப காலமாக அனைத்து தொலைக்காட்சிகளும் படத்தின் பெயர்களில் உள்ள டைட்டிலை வைத்த சீரியல்களை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள். அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் இந்த யுத்தியை கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் கண்ணான கண்ணே சீரியல் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீரியலுக்கு பல ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ஏன் என்றால் இந்த சீரியலில் நடித்துவரும் யுவா அவர்களுக்கு மிகப் பெரிய பெண் ரசிகை கூட்டம் இருந்துவருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் அப்பாவின் பாசத்திற்கு பஞ்சமே இல்லாமலும் லவ் ரொமான்ஸ் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.

kannanakanne
kannanakanne

அதனால் இளவட்ட ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. கண்ணான கண்ணே  யுவா என்கின்ற ராகுல் ரவி கேரள நடிகராக வலம் வந்தவர் இவர் மலையாளத்தில் சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தார் அதனைத் தொடர்ந்து தமிழிலும் நடித்து  அதிக ரசிகர்களை பெற்று விட்டார். இவருக்கு திருமணம் ஆகி விட்டது இவரின் மனைவியின் பெயர் லக்ஷ்மி நாயர். சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்வார்.

kannanakanne
kannanakanne

அந்தப் புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் அழகான ஜோடி என பல ரசிகர்களும் இவர்களை வர்ணித்து வருகிறார்கள்.

kannanakanne
kannanakanne

Leave a Comment