கண்ணம்மா ரோஷினி, ராஜா ராணி சித்து கூட்டணியில் உருவாகும் நம்ம வீட்டு மாப்பிள்ளை சீரியல்.! வைரலாகும் ப்ரோமோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்கள் மிகவும் சுவாரசியமாக இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடர்ந்து புதிய சீரியல்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் நம்ம வீட்டு மாப்பிள்ளை என்ற சீரியல் அறிமுகமாகிவுள்ளது.

இந்த சீரியலில் சின்னத்திரை நடிகர் கார்த்திக் மற்றும் வெள்ளித்திரை நடிகை ஜோதிகா இருவரும் நடிப்பதாக எடிட்டிங் வீடியோ ஒன்றை இணையதளத்தில் ரசிகர்கள் வெளியிட்டிருந்தார்கள். இதனை தொடர்ந்து தற்பொழுது சின்னத்திரை நடிகர் சிம்பு மற்றும் ரோஷ்னி ஹரிப்ரியன் இருவரும் நம்ம வீட்டு மாப்பிள்ளை சீரியலில்  நடிக்க இருக்கிறார்கள் என்ற இணையதளத்தில் வெளியாகிவுள்ளது.

இவ்வாறு சீரியலுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் விஜய் டிவியில் தொடர்ந்து குடும்ப வாழ்க்கை பற்றியும் குடும்ப பெண்களுக்கு தேவையான கருத்துக்களையும் மையமாக வைத்து ஒளிபரப்பி வருகிறார்கள்.  இவ்வாறு சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் அனைத்து தொலைக்காட்சிகளும் புதிய சீரியல்களை அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் அறிமுகமாக இருக்கும் நம்ம வீட்டு மாப்பிள்ளை சீரியலில் சித்து ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதற்கு முன்பு கலர்ஸ் தமிழில் நடித்து வந்தார் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 வில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக ரோஷ்னி ஹரிப்ரியன் நடிக்க இருக்கிறார் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த சீரியலில் இருந்து விலகினார். ராஜா ராணி 2வில் சித்து மிகவும் அமைதியாக இருந்து வரும் கேரக்டரில் நடித்து வருகிறார் ஆனால் நம்ம வீட்டு மாப்பிள்ளை சீரியலில் அதிரடியான சித்துவாக களமிறங்கவுள்ளார்.

Leave a Comment