உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரைப்படத்தை இயக்கிய மாறன் இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் கண்ணை நம்பாதே. இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ஆத்மீக சதீஷ் பூமிகா என பலர் நடித்து வருகிறார்கள்.
கண்ணை நம்பாதே படத்திற்கு சிஎஸ் சாம் இசை அமைத்துள்ளார் மனோகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரித்து வருகிறது.
மேலும் இந்த திரைப்படம் க்ரைம் த்ரில்லர் சஸ்பென்ஸ் என அனைத்தும் அடங்கிய படமாக உருவாகி வருகிறது, இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
