கண்மணி சீரியலில் வில்லியாக நடித்த நடிகையா இது.! கொழுக்கு மொழுக்கென்று இருந்த இவங்க இப்படி ஒளியாக மாறி விட்டாரே.!

0

சன் தொலைக்காட்சியில் நீண்டகாலமாக ஒளிபரப்பப்பட்டு மாபெரும் ஹிட்டடித்த சீரியல் என்றால் அதில் கண்மணி சீரியல் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த சீரியலில் கண்மணி சஞ்சீவ் கதாநாயகியாக மற்றும் கதாநாயகனாக நடித்து இருந்தார்கள். கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் லீசா இவர்  இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து அசத்தி இருந்தார்கள்.

இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றது அதனால் மாபெரும் வெற்றி பெற்றது. கண்மணி சீரியல் கிட்டத்தட்ட 500 எபிசோடுகளை கடந்து பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் வில்லியாக நடித்து ரசிகர்களிடம் படுமோசமாக திட்டு வாங்கியவர் தான் பரணி இளங்கோவன்.

இந்த தொடரில் இவரின் அசால்ட்டான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதனால் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது இதனைத்தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ‘தென்றல் வந்து என்னைத்தொடும்’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் இந்த தொடரில் வினோத் பாபு, பவித்ரா ஜனனி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பரணி இளங்கோவன் அடிக்கடி தங்களுடைய புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்தான் ஆனால் இவர் திடீரென மிகவும் ஒல்லியாக மாறி பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்படி இவ்வளவு உடல் எடையை குறைத்தார் என ஆச்சரியத்தில் பார்க்கிறார்கள்.

இந்த ட்ரான்ஸ்போர்மேஷன் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

kanmani-serial-villi
kanmani-serial-villi