சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியான சன் டிவி தொலைக்காட்சியில் வித விதமான பல சூப்பர் ஹிட் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர். இந்த சேனலில் ஒளிபரப்பாகி செம்ம ஹிட் அடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்த கண்மணி சீரியலில் நடிகர் சஞ்சீவ்க்கு ஜோடியாக நடித்தவர் லீசா ஏக்லைர்ஸ்.
இவர் முதலில் மாடலிங் துறையில் இருந்து வந்தவர் பின்பு ஒரு சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்து இருந்தார் இருந்தும் அவர் பெரிய அளவில் வெள்ளித்திரையில் ரீச் ஆகவில்லை. அதனால் சின்னத்திரையில் வாய்ப்புகள் கிடைத்ததும் சீரியல் பக்கம் நுழைந்துவிட்டார்.
இந்த சீரியலில் அவரது அழகு மற்றும் நடிப்பின் மூலம் பெருமளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தமிழில் பலே வெள்ளையத்தேவா, மடை திறந்து போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இருந்தும் கண்மணி தொடரே அவரை பிரபலப்படுத்தி விட்டது.
தற்போது அவர் சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருவார். இதன் மூலம் பல ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
தற்போது லீசா எக்லைர்ஸ் பற்றி வெளிவந்த தகவல் என்னவென்றால் இவர் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அப்படத்திற்கு ரெட் என தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறி இருந்தார் . இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து லீசா எக்லைர்ஸ் அவர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.
